குற்றங்களுப்பால் ஏன் மார்க்ஸ் மாமனிதர்?

karl காரல் மார்க்ஸ் வீட்டை நீண்ட காலம் நிர்வகித்து வந்த ஹெலன் டெமூத்திற்கும் மார்க்சிற்கும் இடையே இருந்த தொடர்பு, அவர்களுக்குப் பிறந்த மகன் ஃப்ரெட்ரிக், அவரது துயர வாழ்க்கை, இது பற்றி மார்க்சீயர்கள் பலருக்குத் தெரியாது. கட்சி மட்டங்களில் அது குறித்து விவாதிக்க மாட்டார்கள்.

ஏன், பேசினால் என்ன, குடியா முழுகிவிடும்?  மார்க்ஸ்,  ஏங்கெல்ஸ்  தவறு செய்திருக்கின்றனர்,  ஃப்ரெடி என அறியப்பட்ட ஃப்ரெட்ரிக்கிற்கு அநீதி இழைக்கப்பட்டது,  ஆனால் அத்தகைய தவறுகள், குற்றங்கள், மார்க்ஸ்-ஏங்கெல்சின்  மேன்மையினை எவ்விதத்திலும் குறைத்துவிடாது, ஃப்ரெடி, டெமூத் உட்பட எவரும் மார்க்சையோ ஏங்கெல்சையோ விமர்சிக்கவில்லை என்பது பற்றியும் யோசியுங்கள் – இவ்வாறு ஏன் எங்கும் வாதிடப்படுவதில்லை?

அண்மையில் நான் ஃப்ரெடியின் சோக வரலாறு குறித்த ஓர் ஆய்வு நூலைப் படித்தேன். அதிலிருந்து சில தகவல்கள் இங்கே:

லென்சன், நிம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஹெலன் டெமூத், மிக வறிய lenchen குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்துவயதிலேயே வீட்டு வேலை செய்ய அனுப்பப்படுகிறார்.  ஜென்னி குடும்பத்தினரின் பணிப் பெண்ணாகி, அவரது  திருணத்திற்குப் பின், அவருடனேயே சென்று, இறுதிவரை ஜென்னி-மார்க்சுடன் இருந்துவிடுகிறார். ஏறத்தாழ 50 ஆண்டுகள் அவர்களுடன் தான். இறந்த பிறகு அவர் உடல் ஜென்னி, மார்க்ஸ் கல்லறைகளுக்கு அருகிலேயே புதைக்கப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் ஓரிரு முறைதான் தன் உறவினர்களை சந்திக்க ஜெர்மனி செல்கிறார். அவ்வளவு விசுவாசம்.

மார்க்சின் கோபத்தைக் கண்டு மற்றவர்கள் அஞ்சும்போது அவரை அடக்குவது டெமூத்தாகத்தான் இருக்கும். அந்த அளவு முக்கியத்துவம் அவருக்கு.

1850ன் பிற்பகுதியில் டெமூத் கர்ப்பம் தரிக்கிறார். அப்போது ஜென்னியும் ஐந்தாவது முறையாக.

(ஜென்னி-மார்க்சுக்கு ஏழு குழந்தைகள். மூன்று பிறந்தவுடனேயே இறந்துவிடுகின்றன. ஒரு மகன், எட்கர், ஏழுவயதில் மரிக்கிறான். எஞ்சுவது மூன்று மகள்கள்தான்.)

டெமூத் திருமணமாகாத நிலையில், எப்படி கர்ப்பம் எனக் கேள்வி எழுந்திருக்கத்தான் வேண்டும். யார் கேட்டார்கள், என்ன சமாதானம் சொல்லப்பட்டது, தெரியவில்லை.   1851 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று ஆண் குழந்தை பிறக்கிறது . ஹென்றி ஃபிரெட்ரிக் டெமூத் எனப் பெயர் பதிவாகிறது. குழந்தை பிறந்தவுடனேயே தத்து கொடுக்கப்படுகிறது. ஹெலன் டெமூத் மார்க்ஸ் குடும்பத்தாருடன் தொடர்ந்து வாழ்கிறார்.

குழந்தையை தத்தெடுத்துக்கொண்ட ஒரு சாதாரண தொழிலாளி குடும்பத்திற்கு அவ்வப்போது நிதி உதவி அளிக்கப்படுகிறது.

ஜென்னி மற்றும் மார்க்ஸ் இறந்தபின், ஏங்கெல்ஸ் வீட்டிற்கு டெமூத் குடிபெயர்கிறார்.  அதன்பிறகே தன் தாயை சந்திக்க அவ்வப்போது ஃப்ரெடி  வருகிறார். அப்போதும் ஏங்கெல்ஸ் அவருடன் நெருக்கம் காட்டவில்லை. பணியாளர்களுக்கான பின்புற நுழைவு வாயில் வழியாகத்தான் ஃப்ரெடி வந்து போவார்.  தான் ஏங்கெல்சின் மகன் என்று நினைத்தார். ஆனால் ஏன் உறவில்லை, தந்தை என்று சொல்லிக்கொள்ள ஏங்கெல்ஸ் ஏன் மறுத்தார் என்ற கேள்விகள் அவருக்கு இருந்திருக்கவேண்டும், ஆனால் என்ன பதிலை தாய் சொன்னார் என்பது குறித்தும் தகவலேதும் இல்லை.

டெமூத்  அவரை ஏங்கெல்சுடன் அமர்ந்து சாப்பிடச் சொல்வதில்லை. பொதுவாக தன் தாயின் அறையில்தான் ஃப்ரெடி இருப்பார் என்கிறார் அவரது மகன் ஹாரி.

இறக்கும்போது தான் சேமித்துவைத்திருந்த 95 பவுண்டை மகனுக்குத்தான் விட்டுச் செல்கிறார் டெமூத். அதன் பிறகும் ஏங்கெல்ஸ் வீட்டுக்கு வந்து போகிறார் ஃப்ரெடி. ஆனாலும் அப்போதும் ஃப்ரெட்ரிக் அவரிடம் தங்கள் உறவு பற்றி ஏதும் சொல்லவில்லை.

காரல் மார்க்சின் மகள் எலினாருக்கு ஃப்ரெடியுடன் பழக்கமேற்படுகிறது. நல்ல நண்பர்களாகின்றனர். அவ்வப்போது ஏதோ பொருளுதவியும் செய்கிறார். ஏங்கெல்ஸ் தானே ஃப்ரெடியின் தந்தை என்று பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளாதது ஃப்ரெடிக்கு செய்த துரோகம் என்ற ரீதியில் எலினார் முன்னர் தன் சகோதரி லாராவிற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இறக்கும் தறுவாயில்தான் ஏங்கெல்ஸ், மார்க்சின் மகள் எலினாரிடம் ஃப்ரெடி மார்க்சின் மகன்தான் என்ற உண்மையைப் போட்டுடைக்கிறார்.  ஜென்னி ஆத்திரம் கொண்டு விவாகரத்து வரை சென்றுவிடுவார் என்றஞ்சியே தன்னை மார்க்ஸ் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார், நண்பனுக்காக அப்படியே செய்யவேண்டியதாயிற்று  எனத் தெரிவிக்கிறார், ஆனால் எலினாரால் அச்செய்தியை நம்பமுடியவில்லை என்றெல்லாம் நீள்கிறது கதை.

ஃப்ரெடியை கவனிக்கத் தவறியது ஏங்கெல்ஸ் என்று குமுறிய எலினாருக்கு,  தன் அன்புத் தந்தைதான் ஃப்ரெடிக்கும் தந்தை என்று தெரிய வந்திருந்தால், எவ்வளவு பெரிய அதிர்ச்சியாயிருந்திருக்கும்?

பின்னொரு கட்டத்தில்  ஃப்ரெடிக்கு உதவவேண்டியது தங்கள் கடமை என்று  லாராவுக்கு எழுதுகிறார். என்ன அப்படிக் கடமை, தெரியவில்லை. ஆனால் எலினார் பலமுறை உதவியிருக்கிறார்.

லேத் ஆபரேட்டராக பணியாற்றிய ஃப்ரெடி, தொழிற்சங்கம் ஒன்றில் தீவிரமாக செயல்படுகிறார். சில காலம் ஒரு கட்சி கூட  நடத்துகிறார். இறுதிவரை உழைத்து 1929ல் மரணம் அடைகிறார். அவரது மனைவி ஏதோ காரணங்களினால் பிரிந்துவிடுகிறார். ஃப்ரெடியின் மகனும் வறுமையில்தான். ஆனால் இறுதிக்காலங்களில் ஃப்ரெடி தன் மகன் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாகக் கழிக்கிறார்.freddy

 

அவர் ஏன் முறையாகப் படிக்கவில்லை, ஜென்னிக்குப் பிறந்தவர்களுக்கு உரிய கல்வி புகட்டவேண்டும் என்று காட்டிய அக்கறையினை ஏன் மார்க்ஸ் ஃப்ரெடி மீது காட்டவில்லை? ஏங்கெல்சும் அது குறித்து வருந்தியதாகவே தெரியவில்லையே?

ஜென்னிக்கு தெரிந்தால் வீட்டில் ரகளைதான், மேலும் அரசியல் விரோதிகள் அச்சம்பவத்தைப் பயன்படுத்தி மார்க்சை தூற்றுவார்கள், அப்படி ஒரு நிகழ்வு அந்தக் கால இங்கிலாந்தில் மார்க்சை கடுமையாக பாதிக்கும், எனவே பொறுப்பை ஏங்கெல்ஸ் ஏற்றுக்கொண்டார் என்பது ஒரு புரிதல். ஆனாலும் அந்த மகனுடன்  ஏன்  அவர் நல்லுறவு பேணவில்லை,  ஏன் அவனைக் கண்டாலே எரிச்சல் பட்டார், பொறுப்பேற்க நேர்ந்ததாலா? சரி, அதற்குக் காரணம் நண்பன் மார்க்ஸ்தானே? அதற்காக மகனை காய்வானேன்?

டெமூத் இறந்தபோது அவரை மார்க்ஸ் ஜென்னி அருகேயே புதைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டபோது கூட  ஃப்ரெடி கலந்தாலோசிக்கப்படவில்லை. அது எவ்வளவு பெரிய அவமானம் ஃப்ரெடிக்கு?

அவர் காரல் மார்க்சின் மகன் தான் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் ஏதுமில்லை.  டெமூத்திற்குப் பின் ஏங்கெல்ஸ் வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்றவரின் கடிதம் ஒன்றிலிருந்துதான் நமக்கு விவகாரமே தெரிய வருகிறது. ஆனால் அக்கடிதத்தின் நகல்தான் இருக்கிறது. மூலம் இல்லை. என்னாயிற்று? நகல் போலி என்பது ஒரு சாராரின் கணிப்பு.

ஃப்ரெடி குறித்து காரல் மார்க்ஸ் எழுதியிருக்கக்கூடிய கடிதங்கள் ஏதும் கிடைக்கவில்லை.  அவற்றை   ஏங்கெல்ஸ் எரித்துவிட்டார் என நம்பப்படுகிறது.

எனினும் பல்வேறு சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது ஏங்கெல்ஸ் எலினாரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது  உண்மை, ஃப்ரெடி மார்க்சின் மகன்தான் என்ற முடிவுக்கு வரமுடியும்.

அப்பிரச்சினை ஒரு புறம், இன்னொரு புறம்,  மார்க்ஸ் அல்லது ஏங்கல்ஸ் யாருக்குப் பிறந்திருந்தாலும், ஃப்ரெடியை வளர்ப்பதில் ஏன் உரிய கவனம் காட்டப்படவில்லை?

உலகத்திற்கே நீதி வேண்டும் என முழங்கியவர்களால், தங்களுக்கு நெருங்கிய தொடர்புள்ள ஒருவரை எவ்வாறு உதாசீனப்படுத்த முடிந்தது?

அதே நேரம் காரல் மார்க்சுடன் இருந்தவர்கள் எவரும் ஃப்ரெடி பற்றி வாய் திறக்கவில்லை என்பதையும் மறக்கலாகாது.

மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து மார்க்சின் மீது காதல் வயப்பட்டு, பலரது அறிவுரையினையும் மீறி அவரை மணந்துகொண்டு, இறுதிவரை பல்வேறு துயரங்களுக்குள்ளான ஜென்னி, மார்க்சை மிகவும் நேசித்திருக்கிறார். ஏழ்மை அவர்களை வாட்டியபோதும் தன் முடிவிற்காக ஜென்னி வருந்தவே இல்லை.

அதே போலத்தான் டெமூத்தும், தன் மகனிடம் மார்க்ஸ் மீது எந்த வெறுப்பையும் வளர்க்கவில்லை.

அவர் மீதிருந்த  அபரிமிதமான மரியாதை காரணமாகவே ஃப்ரெடி பிரச்சினை தொடர்பில் மார்க்சை விமரிப்பதை அனைவரும் தவிர்த்திருக்கின்றனர்.

அவர் பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்காக எழுதிய கட்டுரை இன்றளவும் பிரமிப்பை ஏற்படுத்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.  அந்தக் கட்டத்திலேயே மார்க்ஸ் பேராசிரியராகியிருந்திருக்கலாம், வசதியாக வாழ்ந்திருக்கலாம், ஆனால் தன் கொள்கைகளுக்காக அவர் அப்படி ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

புதிய யுகம் காணப் புறப்பட்டவர் வாழ்வின் கடைசிக் கட்டங்களில்தான் சற்று வசதியாக வாழ்ந்தார். மற்றபடி பிச்சையெடுத்துத்தான் வாழவேண்டிய நிலை. ஏங்கெல்சிற்கு அவர் எழுதும் பல கடிதங்களில் தொடர்ந்து தன் வறுமையைக் குறித்துத்தான் புலம்பியிருக்கிறார்.marx family

தன் அன்பு மனைவியை ஏழு முறை கர்ப்பம் தரிக்கவைத்தபோது அவரது உடல்நிலை என்னவாகும் என்று அவர் யோசித்துப் பார்க்கவில்லை. ஃப்ரெடியை  நட்டாற்றில் விடுகிறோமே என்று அவருக்குக் குற்ற உணர்வில்லை.

ஏங்கெல்சைத் தவிர மற்ற அனைவருடனும் மார்க்சுக்கு சண்டைதான், சதா சச்சரவுதான். அமைப்புகளில் இயங்கும்போது கீழ்த்தரமாகக் கூட அவர் நடந்துகொண்டார் எனக் குற்றச்சாட்டுக்கள் உண்டு.

ஆனாலும் அவரது அற்புத தரிசனங்களுக்காக, புதிய மானுடம் காண்பேன் எனச்  சூளுரைத்துப் புறப்பட்டவர், எக்கட்டத்திலும் பின்வாங்காத அந்த மன உறுதிக்காக, அவரது குற்றங்களை, குறைகளை, உடனிருந்தவர்கள் மன்னித்தார்கள்.  நாமும் மன்னிக்கலாமே.

எந்த அளவீட்டின்படியும், காரல் மார்க்ஸ் மனித குல வரலாற்றில் மிக உயர்ந்துதான் நிற்பார் என்றென்றும். அனைத்தையும் வெளிப்படையாகப் பேசினால் அவர் குறித்த புரிதல் மேம்ப டவே செய்யும். இது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குப் புரியாமல் போனதுதான் வேதனை.

 

 

 

Advertisements
Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

Will the Vindhyas be breached?

yogi-amit-shah-modi-650-afp_650x400_51501221738

The recurrent eruptions in Karnataka, as it heads to assembly elections, seem to have made many secular observers uneasy.

They tend to forget that since 1994, the BJP has been a force to contend with in the state and had won an absolute majority in 2008, though it was defeated in the very next polls. In the last Lok Sabha elections the party had won 17 of the 28 seats at stake.

So even if it secures majority now, it would not mean any dramatic change in the political scenario. Still the anxiety persists, for obvious reasons.

Narendra Modi, the Hindutva messiah, could come back to power again in 2019, and one never knows what all the parivar will do thereafter.

Inevitably people agonize endlessly.

https://thewire.in/218388/south-india-final-frontier-contest-hinduism-hindutva/

Between them the five south Indian states, Tamil Nadu, Kerala, Karnataka, Andhra Pradesh and Telengana and the Pondicherry union territory command only 130 seats in the 552-member Lok Sabha.

So the saffron forces can happily concentrate on the North, perennially ravaged by communal tensions, letting the South stew in its own secular juice.

But no, they won’t. It is not in them to leave any region uncontaminated by their poison. Already  the continuing violence in Kannur, the love jehad wrenching, the Sri Ram Sene thugs  and the like do give the parivar some hope.

Still they have to encounter serious obstacles in their southward push.

For one, the absence of humiliating historical memories stands in the way of any anti-Muslim project.

Certainly there are horror stories dating back to the invasion of Malick Kafur in the 14th century, the massacres perpetrated by Tipu Sultan towards the close of the 18th century and the Moplah rebellion of 1921.

But unfortunately for the communal forces, there is no visceral antipathy to Muslims, broadly speaking. The BJP and its front organizations may raise their hate campaigns to feverish pitch whenever an opportunity arises,  Owaisis and their counterparts elsewhere do help along, still people refuse to reach for their trishuls.

Many will be surprised to know that back in the sixties,  Malick Kafur was a hit on the Tamil stage. Put out by R S Manohar, a popular artiste, the play sought to portray Kafur as a great hero.

In Lankeswaran, another chartbuster of the same stage group,  Ravan, the well-known villain of Ramayan, turned into a king of great valour and integrity.

lanksPrepare now to gasp, I say – Manohar was a Vaishnavite Brahmin, himself a man of conservative views. Nothing radical about him, but he relished turning legends on their heads, knowing perhaps it would sell. Till the seventies, he was ruling the roost, but the advent of TV marked the end of his stage career.

When Malik Kafurs could become heroes, how can you expect the Tamil psyche to abhor anything  Abrahamic, as the RSS would like us to? Well the fact remains you can’t stage Manohar-type of plays today, there could be serious law and order problems, there are always thugs lurking in the corner. Much water has flown, the horrendous 1998 Coimbatore blasts, for instance. Still the soil is resistant.

The legacy of Periyar  (savant) E V Ramasamy, the founder of the Dravidian movement, is certainly questionable on many grounds. His anti-Brahmin crusades became mindless at some stage and he could be faulted for papering over the contradictions in the non-Brahmin bloc. But then he succeeded in eternally othering the Brahmins and, derivatively, the Brahminical Hinduism. In any case Hinduism is built on Brahminical premises, so when you fault one, you fault the other too.

With the Brahmins remaining favourite whipping boy, is there room for more? May be not. Off and on Muslims have actually been seen as allies by the Dravidian forces.

Periyar had his limitations, and his disciples are one big bunch of hypocrites, carrying little credibility. Temples draw huge crowds and ministers think nothing of organizing havans. Small time godmen and godwomen sprout from the most unsuspected corners.

Priestly chants have reached the doors of Karunanidhi, the DMK patriarch, who would still like to pretend to be an uncompromising Dravidianist. His daughter -in -law, wife of heir apparent Stalin, makes no secret of her ‘piety,’ while Karunanidhi’s second wife Rajathi Ammal courts all kinds of godmen, praying for better times for her daughter Kanimozhi who, incidentally, seems to have lost out in the battle for succession.

For all his pretensions, Karunanidhi himself didn’t have any qualms over aligning himself with the Vajpayee-led BJP back in 1999 and, quite significantly, he kept his mouth firmly shut in 2002 – not a word of condemnation.

As Chief Minister,  he had cracked down hard on Muslims in the wake of the Coimbatore blasts, ruining many lives. Still at no stage DMK would adopt any anti-Muslim plank.

Modi’s rise has left all Dravidianists stupefied. Having to hide so many skeletons, they won’t go too far in taking on the cow brigades. Though Stalin says never again with the BJP, DMK has always been against divisive agenda, etc, he could be counted to move over to the Modi camp at an appropriate moment, if it helps him politically. Still, still, no soft Hindutva, one can rest assured.

The AIADMK, a lot more ideologically bankrupt, could become Modi’s B team alright, but its hold is waning. Actor Rajnikanth has declared his politics would be ‘spiritual’ –  whatever he might mean by that, he would not be averse to be an ally of the BJP. Still, still, still, he too would take care not to offend the Muslims, am sure.

They might constitute less than six per cent of the population and might not be the decisive factor in more than 20-odd Assembly seats, still it is against the Tamil ethos for any politician to demonize the Muslims.

The BJP was seen quite active when in alliance with the DMK in 1998-04. Now it seems to have acquired a seemingly higher profile, but in an assembly by-election held recently, its candidate polled less than NOTA.

There is of course some constituency for the BJP, some upper caste non-Brahmins, some OBCs who have made their way up in the recent past, castes militantly against the Dalits and so on, not to mention the Brahmins themselves. But they are unlikely to be of any decisive influence anywhere.

If any party plays court to Islamic fundamentalists too very much, any possible backlash could benefit the parivar. But once bitten eternally shy, our politicians. The Muslim parties too are walking gingerly these days, and the outfit deemed responsible for the 1998 blasts is now defunct. So then Periyar’s land will remain out of bounds for the Hinduvaites for the foreseeable future.

As for Karnataka itself,  many fringe groups are operating, the most lumpenish being the Sri Ram Sene – http://www.tehelka.com/2010/05/rent-a-riot-cash-for-chaos/

That apart anti-love-jihad outrages are reported frequently from certain parts of the state.

http://www.livemint.com/Politics/T4DS9yZjZVOIDSH4xHTc1M/Rightwing-outfits-campaign-in-Karnataka-against-love-jihad.html.

The recent murder of Gauri Lankesh revealed how serious the situation was.gauri-lankesh-shot-dead-in-bengaluru-750x506

https://scroll.in/article/849775/where-do-the-investigations-into-the-murders-of-kalburgi-pansare-and-dabholkar-stand

But even while acknowledging it all, it can be safely posited that the polarization is confined to a few pockets. If the thugs get a free hand, it is more due to tacit leg-up from the government of the day or its fecklessness.

Also the parivar might seek to whip up passion over Tipu Sultan by damning him as a Muslim king, but he is also looked upon as a hero who took on the British.

http://www.thehindu.com/opinion/op-ed/All-about-Tipu-Sultan/article16440247.ece

Even Yeddyurappa and his associates had celebrated Tipu  in the past. And in a state where pride in things unique to state is the order of the day for long, one can only go that far and no more with religious rhetoric.

In certain ways the BJP could seek to gain from Kannada chauvinism that is on the ascendant, thanks to issues with neighbouring  states on different fronts.

So how will it all play out in the electoral arena? A a knowledgeable observer, points out: “The BJP was a non-entity in the state till a couple of decades ago. . Congress (O) had strong presence in Karnataka during Indira’s time. Later Ramakrishna Hegde became the rallying point for all anti-Congress forces. After Hegde’s death, these anti-Congress forces were forced to take shelter under BJP. Most of the present day second rung leaders of the party have nothing to do with the RSS at all.

“The Lingayats did not have strong leaders after Veerendira Patil, and naturally they rallied behind  Yeddyurappa,  who has now emerged as their tallest leader. The coastal areas, where Congress had a good presence in the past, switched over to the BJP when the VHP became stronger.

The Pejawar mutt pointiff is a founder of VHP. But the heads of major mutts are uncomfortable with his kind of strident Hindutva. They rather tend to support candidates on caste lines. Now the BJP is trying to lure them too.”

For its part the Congress has supported the Lingayat demand for separate religious status from Hinduism in order to cut into BJP vote bank.

https://scroll.in/article/859122/attack-on-hindus-facing-lingayat-challenge-the-vhp-sharpens-attack-on-congress-in-karnataka

Thus at the end of the day, it is the caste interests that could be said to have helped the rise of the BJP in Karnataka, but even there the monstrous corruption seen during Yeddy’s regime did it in.

Siddaramiah’s administration has received mixed reviews, still the BJP could lose is the general reading because of the limitations of its communal card. So much for all the Hegde noise. But if the BJP wins, parivar could intensify its activities, a worrying turn it would indeed be.

In both Andhra and Telangana, you have regimes quite friendly to the BJP, but again communalization of the polity has not worsened much. The state has seen wars with Muslim kings, the Vijayanagar empire was brought down by Bamini sultans, Nizam’s razakars have run riot, you have Owaisis in Hyderabad, still no aggressive anti-Muslim sentiments.

Possibly political forces do not see any particular advantage in polarization, the Congress would not in any case, while the opposition, like in the shape of the late N T Rama Rao or his son-in-law or Telengana’s Chandrashekar Rao, might be religiously inclined but they have never wanted to instigate riots.

Now both the Telangana and Andhra Pradesh ruling regimes are willing to be with Modi, and turn a blind eye to bigotry, but they themselves would not turn communal. And they would not allow the BJP much of a leeway either, it has less than ten seats in both the legislatures put together.

The coastal Andhra region had been part of the erstwhile Madras presidency under the British, and the essentially secular politics of that entity could have left its imprint on AndhraPradesh when it was eventually created.

In the future too, Owaisis could drive more sections of the Hindus into the BJP fold, but not much.

Ironically it was the comrades who could have enabled the Hindu communalists a toe-hold in the south, by their blatant appeasement gestures like the creation of the Muslim-majority Malappuram district and accommodating the Muslim League in their front. But  at some stage, Namboodripad, who had started it all, saw his folly and slowly distanced emsthe CPM from communal politics. Today they don’t have any overt alliance with any Muslim outfit, though an independent Muslim candidate might be supported here or there.

The Congress continues with its well-known appeasement policies, but the average Keralite is far too civilized to fall prey to parivaar. Kannur is a special case of its own.

https://www.thenewsminute.com/article/kannur-s-trail-blood-how-every-major-party-kerala-has-history-political-violence-69636

The violence is spreading to neighbouring regions too

http://www.firstpost.com/politics/keralas-political-violence-involving-cpm-rss-cadre-raging-outside-kannur-may-be-sanghs-attempt-to-expand-its-base-3874481.html

But the overall impact will be minimal. It took more than a half a century for the BJP to gain just one seat in the legislature. And thus it has to muddle its way through before becoming a significant political force – cry hoarse as they might over love jihad or Gulf money, the parivar seems destined to remain on the fringes for a pretty long time to come in God’s own country.

So then the Vindhyas are likely to remain an impenetrable fortress for the obscurantist forces for a long time to come. That is some solace.

 

 

 

 

 

Posted in Uncategorized | Leave a comment

இளவரசனின் மரணம் – II

Image

இந்த சோக வரலாறு பற்றி முடிவில்லாமல் எழுதிக்கொண்டேயிருக்கலாம்.

சென்ற பகுதியில் திராவிட இயக்கம் பற்றி சில குறிப்புக்கள். இம்முறை தலித் இயக்கங்கள் குறித்தும் பொதுவான பண்பாட்டுச்சூழல் குறித்தும்.

இளவரசன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா? என சூடான விவாதங்கள்.

ஒருவர் ஓடும் ரெயில் முன் பாயும்போது மோதி, தலை சிதறி, தூக்கி எறியப்படலாம். அப்படி ஒரு சூழலில் உடலில் வேறெங்கும் பெரிதாகக் காயங்கள் ஏற்படவேண்டிய அவசியமில்லை.

எப்படியும் மருத்துவர்களின் முடிவையே நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும். பரிசோதனை செய்தவர்களுக்குத் தகுதியில்லை இப்படியெல்லாம் பிரச்சினை எழுப்பிக்கொண்டேயிருக்கலாம்தான்.

ஆனால் இளவரசனைக் கொல்வதில் பாமகவினருக்கு என்ன இலாபம் என யாரும் கேட்பதில்லை. திவ்யாவை மிரட்டி இனி இளவரசனுடன் வாழப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அவர் அறிவித்துவிட்டபின் எதற்காகக் கொல்லவேண்டும்?

பிரச்சினையை வளர்த்தால் தொலைக்காட்சிகளில் வரும், பரபரப்பு கூடும். திவ்யா கூட ஏதாவது விபரீத முடிவுக்கு வரக்கூடும். அவ்வளவே.

இளவரசனின் குடும்ப வழக்கறிஞர் ரஜினிகாந்த் வன்னியரைப் பற்றி தரக்குறைவாகப் பேசி சர்ச்சைக்குள்ளானவர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் அடாவடிகள் குறித்துக் கேட்கவே வேண்டாம் பலமுறை பல தரப்பினர் சொல்லியாகிவிட்டது, அவர்கள் நிறுத்துவதாயில்லை

தலித் பிரச்சினைகளை அம்போவென்று விட்டுவிட்டு தமிழ்த் தேசிய ஜோதியில் கலக்க முற்படும் திருமாவளவன் ஒப்பீட்டளவில் கிருஷ்ணசாமியை விட பழகுதற்கு இனிமையானவராக, சற்று விட்டுக்கொடுத்துப் போகக்கூடியவராக இருக்கலாம். ஆனால் அவரது வழிகாட்டுதலின் விளைவாய் ஆதி திராவிடர் சமூகத்தில் உருப்படியாக மாற்றங்கள் எதுவும் நிகழும் எனத் தோன்றவில்லை. ஆனால் அவரது அமைப்பில் காணப்படும் அவலங்கள் குறித்து எவரும் பகிரங்கமாகப் பேசுவதில்லை.

இளவரசனுக்காகக் கண்ணீர்விட்டால், இராமதாசை சபித்தால் மட்டும் தமிழ்ச் சமூகம் தலைகீழாய் மாறிவிடுமா என்ன? அரசியல் சக்திகளாக விடுதலைச் சிறுத்தைகளும் புதிய தமிழகமும் முகிழ்த்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவை கடந்து வந்த பாதை குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும், அனைத்து தரப்பு முற்போக்காளர்களுடன் இணைந்து தொடர்ந்து தலித்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுத்து நிறுத்தும் வழிகள் பற்றி ஆராயவேண்டும்.

இளைஞர்கள் சமூக அவலங்கள் குறித்து அக்கறைகொள்ளாமல் காதல், ஆடம்பர வாழ்க்கை என பல்வேறு கனவுகளில் வீழ்கின்றனர். அதற்கான  பண்பாட்டுச்சூழல் நிலவுகிறது.  குறிப்பாக திரைப்படங்களின் மோசமான தாக்கம், இவை பற்றியெல்லாம் நிறையப் பேசவேண்டும்.

எழுபதுகளில் எண்பதுகளில் நிறைய பேசப்பட்டன, பெரிதாக சமூக மாற்றம் நிகழ்ந்துவிடவில்லைதான். ஆனால் அப்போது ஏதோ ஒருவித சமூக அக்கறையினை பல மட்டங்களிலும் நம்மால் காணமுடிந்தது. அத்தகைய அக்கறையினை மீட்டெடுப்பதே ஆரோக்கியமான மாற்றத்திற்கான முதல் அடியாகவும் இருக்கலாம்.

Posted in Uncategorized | Leave a comment

இளவரசன் மரணம்: யாருக்கு மேலதிகப் பொறுப்பு?

Image

இளவரசன் மரணம்: யாருக்கு மேலதிகப் பொறுப்பு?

நிச்சயமாக திராவிட இயக்கத்திற்கே. சாதியின் மூலமாக ஒருவர் தன்னை பொருளாதார ரீதியாக முன்னேற்றிக்கொள்ளமுடியும் என்ற நிலையை உருவாக்கி, அதை நிறுவனமயப் படுத்தி, இறுதியில் சாதிக்கெதிரான போராட்டத்தை வெறும் பிராமண ஆதிக்கத்திற்கெதிரான போராட்டம் மட்டுமாகக் குறுக்கியதன் இன்னொரு பரிமாணமே இன்று நாம் காணும்  சாதிவெறி.

நான் முன்பே குறிப்பிட்டிருப்பதைப் போல் பெரியாரும் தவறு செய்தார். பிராமணர்களை வீழ்த்த பெரும்பான்மையினரான தலித் அல்லாத பிராமணரல்லாதார் மத்தியில் ஒற்றுமை வேண்டுமென நினைத்ததால் அவர்களுக்கும் தலித்துக்களுக்குமிடையேயிருந்த முரண்பாடுகளைக் களைவதில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை.

அது மட்டுமல்ல கருணாநிதி தலைமையில் அனைத்து திராவிட இயக்க மதிப்பீடுகளும் அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கையில் அதைக் கண்டும் காணாமல் இருந்தது மட்டுமல்ல தொடர்ந்து கருணாநிதிக்குத் தனது ஆசிகளை வழங்கியவர் பெரியார்.

அவருக்காவது சில வரலாற்றுக் கட்டாயங்கள் இருந்தன மேலும் அவரது செயல்பாடுகள் பொது நன்மையின் அடிப்படையில் எழுந்தவை. ஆனால் கருணாநிதி ஒட்டுமொத்த இயக்கத்தையும் வக்கரித்தவைத்தவர். சுய நலத்திற்காக எல்லாவற்றையும் அடகுவைத்தவர், துறந்தவர்.

70களில் ஆளாளுக்கு சாதிமாநாடு நடத்தி, எங்கள் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேருங்கள் என்ற கோரிக்கையுடன் முதல்வரை சந்திப்பார்கள். கப்பமும் கட்டுவார்கள். அவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.

ஒரு பக்கம் கருணாநிதி தன்னை வளப்படுத்திக்கொண்டார். இன்னொரு பக்கம் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகையை பெற்றுத்தந்த சமூகப் பெரியவர்களின் செல்வாக்கும் அதிகரித்தது.

இத்தகைய போக்கின் விளைவாய்தான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் அனுமார் வால் போல நீள, பின்னர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் என இனங்காணவேண்டியதாயிற்று.

இன்னமும் வளமடைந்த பகுதியினருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகை கூடாது என்பதாகப் பொதுக்கருத்தினை உருவாக்கமுடியவில்லை. வாய்ப்பில்லாதவர்கள் தொடர்ந்து பின் தங்கியிருக்கிறார்கள். ஆனால் சாதிய அரசியல் பேசுவோர் நிலை மேம்பட்டுவிட்டது.

பெரியாரே தலித் விடுதலைமீது அதிக அக்கறை காட்டவில்லை. அப்பின்னணியில் கருணாநிதியின் தலைமை இடைநிலை சாதியினரின் சாதீய மனப்பான்மை இன்னமும் இறுகவே வழிவகுத்தது.

அந்தந்தப் பகுதித் தலைவர்கள் சுல்தான்களாகிய நிலையில் அந்தந்தப்பகுதியில் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றிய சாதிகளும்  ஆதிக்கம் செலுத்தத் துவங்கின. இதெல்லாம் தலித்துக்களுக்குப் பல்வேறு சிக்கல்களை உருவாக்கின.

பெரியார் போராட்டங்களின் விளைவாய் சாதி அடுக்கின் இறுக்கம் நெகிழ்ந்து தலித்துக்கள் ஓரளவு சமூக அங்கீகாரம் பெற்றனர் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் இடைநிலை சாதியினரின் வன்மத்தையும் இப்போது எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. அவ்வன்மத்தினால் விளையும் வன்முறை மேல்சாதியினரில் ஆதிக்கத்தின்போது நிகழ்ந்ததைவிடவும் இன்னமும் கொடுமையான இருக்கிறது.  

தென்பகுதித் தேவர்கள் அளவு  வட பகுதியில் வன்னியரின் கொடுங்கோல் இல்லையெனினும் இரு தரப்பினரின் மன நிலையும் ஒன்றுபோலவே தான் இருக்கிறது.

இராமதாஸ் தன் பங்கிற்கு மேலும் கொம்பு சீவிவிட்டிருக்கிறார். உத்திர பிரதேச கன்ஷி ராம் மாயாவதி அரசியலை முன்மாதிரியாகக்கொண்டு வானவில் கூட்டணியை உருவாக்க முயன்றார். ஓரளவு வெற்றியும் கண்டார். ஆனால் கருணாநிதியை விடவும் மிக மோசமானவர் என்பது அம்பலமானதால் விரைவிலேயே சரிவையும் சந்திக்கவேண்டியதாயிற்று. எனவேயே நத்தம் காலனி, மரக்காணம் இப்போது இளவரசன். ஆக கோரமான பரிணாம வளர்ச்சியின் இறுதியில் வருபவர் மருத்துவர் ஐயா.

எனவே சாதி ஒழிப்பு பற்றி பிரலாபிப்போர், இராமதாசைத் தூற்றுவோர் கருணாநிதி மற்றும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பினையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இன்னொரு புறம் இளவரசன் பிரச்சினையை மேலும் வளர்த்து தேவையில்லாமல் பதட்டத்தை உருவாக்குவதை விட ஆக்கபூர்வமாக செயல்படலாம்.

அகமணமுறைக்கு முற்றுப் புள்ளிவைப்பதே சாதிஒழிப்பிற்கு சரியான வழி என்பது உண்மையாயினும் கூட அவ்வளவு எளிதல்ல அது. இந்நிலையில் அனைத்து கட்சியிலுள்ள முற்போக்காளர்கள் ஒன்றிணைந்து சாதி முரண்பாடுகளைத் தொடர்ந்து சாடவாவது அமைப்பு ஒன்று உருவாக்கலாம்.

தவிரவும் இன்னமும் தலித் இயக்கங்கள் அருந்ததியரை ஒதுக்கிவைப்பது எவ்வளவு அநீதி என்பதையும் பகிரங்கமாக எடுத்துக்கூறவேண்டும்.

Posted in Uncategorized | 1 Comment

ஆங்கிலம் ஏன், எங்கு, எந்த அளவில்?

Image

ஆங்கில வழியில் பயில்வோர் ஆங்கிலத்தில்தான் உள் தேர்வுகள் எழுதவேண்டுமா, அநீதி, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என ஆளாளுக்கு கொதித்தெழ, அரண்டு போன ஜெயலலிதா அம்முயற்சியைக் கைவிட்டார்.

தமிழார்வலர்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டார் புரட்சித் தலைவி. அடுத்து தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை மேலும் பரவலாக்கும் முயற்சியினைக் கைவிடவேண்டும் என இப்போது வலியுறுத்துகின்றனர். சிபிஎம்மும் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவதில் முன்னணியிலிருக்கிறது.

இது எந்த அளவு ஆரோக்கியமான போக்கு? ஆங்கிலத்திற்கு எந்த இடம், தமிழிற்கு எந்த இடம்?

மிகச் சிறு பிராயத்தில் தாய்மொழியைத் தவிர வேறு மொழியைக் கற்பதே தேவையில்லாததொரு சுமை என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தாய்மொழி மூலம் எதனையும் கற்றுக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது என்றும் கூறப்படுகிறது, ஆறாம் வகுப்புவரை ஆங்கிலம் அநாவசியம் என்று கூட சில வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் யதார்த்தமென்ன? அங்கிங்கெனாதபடி ஆங்கிலம் எங்கும் வியாபித்திருப்பதுதான். தாய்மொழியில் பலவற்றைச் சாதிக்கமுடியும் என்று நிரூபித்த ரஷ்யர்களும், சீனர்களும், ஜப்பானியரும் ஆங்கிலம் பக்கம் திரும்புகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டைத் தவிர வேறு எங்குமே ஆங்கிலத்திற்கெதிர்ப்பில்லை எனலாம். முஸ்லீம் நாடுகளில் ஆள்வோரும் அவர்களது ஏவலாளர்களும்  ஆங்கிலம் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆங்கிலம் முடிவு கட்டிவிடுமோ என்று கூட அஞ்சலாம். ஆனால் அவர்களும் ஆங்கிலத்தை ஏதாவது ஒரு வழியில் அனுமதிக்கவே செய்கின்றனர்.

உலகமயமாக்கலின் ஒரு தவிர்க்கமுடியாத பகுதியே ஆங்கிலமும். உலகமயமாக்கலை எவ்வளவு அனுமதிக்கலாம், கூடாது, என முடிவில்லாமல் வாதிட்டுக்கொண்டேயிருக்கலாம்.

அத்தகைய போக்கின் பல்வேறு சீரழிவுகளை நாம் எங்கும் பார்த்துத்தான் வருகிறோம், அமெரிக்காவிலேயே கூட அதற்கெதிர்ப்பெழுந்திருக்கிறது, அடித்தட்டுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதெல்லாம் உண்மையாயினும் கூட எப்படி காலனீய ஆதிக்கம் இந்தியாவிலும் மற்ற பல நாடுகளிலும் நிலவுடைமை அமைப்பினை, மதத்தரகர்களின் கோரப்பிடியினை அசைத்து அறியாமை நீங்க வழி கோலியதோ அதே போல ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்திற்கு உலகமயமாக்கல் வழிசெய்கிறது என நினைக்கிறேன். அதற்குமப்பால் அது தவிர்க்கமுடியாததென்றும் நினைக்கிறேன்.

எந்த ஒரு நாடும் சமூகமும் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பன்னாட்டு சக்திகளைப் புறந்தள்ளமுடியும் என்று தோன்றவில்லை. அப்படிச் செய்ய முயல்வது தாலிபான்களுக்கும் வழிவகுக்கக்கூடும்.  அல்லது மேற்குலகை நிராகரிப்பதாகக் கூறிக்கொள்ளும் வடகொரியா வகை ‘கம்யூனிச’த்திற்கு.

பல்லக்கு தூக்கும் அளவு உனக்கு வலுவிருந்தால் போதும் அதை மட்டும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எனக் கொக்கரிக்கும் ஆளும் வர்க்கத்தினையும் அவர்களது ஏவலாளிகளான நடுத்தரவர்க்கத்தினரையும் தீவிரமாக எதிர்கொண்டு பொருளாதார சமூக நீதி கணிசமான அளவு உறுதிப்படுத்தப்படுவதைத் தாண்டி உலகமயமாக்கலை எதிர்ப்பது அபத்தம்.

அதே பார்வையிலிருந்துதான் நான் ஆங்கிலத்திற்கான இடத்தையும் பார்க்கிறேன். வேலைவாய்ப்பினை உறுதி செய்வது மட்டுமல்ல, நம் அறிவினை விசாலப்படுத்திக்கொள்ள ஆங்கிலம் தவிர்க்கவியலாதது.

என்ன இல்லை என் தாய்த்தமிழில் என மைக் பிடித்துக்கொண்டு முழங்கலாம். ழ இருக்கிறதா, வள்ளுவம் என்ன சொல்கிறது தெரியுமா, என்றெல்லாம் அரற்றலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் ஆங்கில ஆதிக்கம் தவிர்க்கவியலாதது. அனைத்து தரப்பினரும் அதில் தேர்ச்சி பெறுவதைத் தடுப்பது ஒன்று அறிவீனம் அல்லது இரட்டை வேடம் போடுவதாகும். கருணாநிதி அப்படிச் செய்யலாம், வைகோ செய்யலாம், ஆனால் ஏன் இடதுசாரிகள் இதற்கு இரையாகின்றனர்?

குறிப்பாக ஆங்கிலவழியில் பயில்வோர் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும் என்பதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. அப்புறம் எப்படித்தான் ஆங்கிலம் கற்பதாம்? ஆங்கிலவழியில் படித்தேன் பட்டம் பெற்றேன் என்று சொல்லிவிட்டு அரைகுறை ஆங்கில அறிவுடன் வெளியுலகை சந்திக்கும்போது எத்தனைவித இடர்ப்பாடுகளை அம்மாணவர்கள் சந்திக்கவேண்டியிருக்கும்? தமிழார்வலர்களோ இடதுசாரிகளோ அவர்களுக்கு வேலை வாங்கித்தந்துவிடமுடியுமா? தமிழ்வழியில் பட்டம்பெற்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை என்பதைக்கூட எவரும் உறுதிசெய்யமுடியவில்லை. இப்போதெல்லாம் அரசுப் பணிகள்வேறு அருகி வருகின்றன. இந்நிலையில் தமிழ்வழியில் படித்து இவர்கள் சாதிக்கப்போவது என்ன?

வேலை வாய்ப்பின்றி, பிழைப்பதே பெரும் பாடாகும் அவலத்தை இடதுசாரிகள்கூட சரிவர உணராமல் தமிழ்ஜோதியில் கலப்பது ஆகக்கூடுதலான வேதனை.

நமது வழக்கறிஞர்க்ளைப் பார்க்கும்போது, நீதிமன்றங்களில் அவர்கள் வாதாடும்போது ஆங்கிலப் போதாமையின் கொடுமை நமக்கு உறைக்கும். ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞர்களுக்கும் தெரியாதவர்களுக்குமிடையே எவ்வளவு பெரிய இடைவெளி என்பது நீதித்துறையினை அவதானிப்பவர்களுக்கே விளங்கும்.

மனு எப்படி பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டார்? பிராமணரல்லாதோர் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றார். கல்வி ஆதிக்கசாதியினர்க்கும் மட்டுமே என்றிருந்தது. அவ்வாதிக்கத்தை நிலை நிறுத்துவதில் வடமொழி மிக முக்கிய பங்கு வகித்தது. இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் நவீன பிராமணர்களாகிவிட்டனர் என்பதே கசப்பான உண்மை.

இந்த ஆளும்வர்க்க-நடுத்தரவர்க்க கூட்டைத் தகர்த்து சமூகத்தினை ஜனநாயகப்படுத்துவதில் ஆங்கிலத்திற்கு மிக முக்கிய பங்கிருக்கிறது.

ஆனாலும் எவ்வினமும் எச்சமூகமும் தாய்மொழியினை புறக்கணிக்கலாகாது. தாய்மொழி வழியே சிலவற்றைக் கற்றுக்கொள்வது எளிதாக இருக்கும் என்பதால் . தொடக்கக் கல்வி மட்டும் தாய்மொழி வழியில் என்றால்  போதுமானது.

அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியிலேயே தொடக்கக்கல்வி என்பதை விதியாக்கவேண்டும். ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகள் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும். எவருக்கும்  விதிவிலக்கில்லை.

மேலும் எந்தவொரு மாணவரும் குறிப்பிடத்தகுந்த அளவு தத்தம் தாய்மொழியில் தேர்ச்சிபெறமுடியாமல் பள்ளிப் படிப்பை முடிக்கமுடியாது என்ற நிலையினையும் உருவாக்கவேண்டும். தாய்மொழி அறிவு, பண்பாட்டுக்கூறுகளை நிராகரித்துவிட்டு பொதுவெளியில் அடியெடுத்துவைக்கமுடியாது என்றாகவேண்டும். அதற்கப்பால் அவரவர் விருப்பம், ஆர்வம், சூழல்.

ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழியிலேயே அனைத்து பள்ளிகளிலும் என்றாகவேண்டும். போதுமான அளவு ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கவேண்டும்.

இல்லை, என்ன விலைகொடுத்தாவது உலகமயமாக்கலையும் ஆங்கிலமயமாவதையும் தடுத்து நிறுத்தவேண்டும், அதுவே புரட்சி என்றால் அதற்கு என்னிடம் விடையில்லை.

Posted in Uncategorized | 4 Comments

”தேவை மனித நேயம்”

Image

“போர்க்குணம் மட்டும் ஆயுதமல்ல…பெரும் எண்ணிக்கை தற்கொலைப் பட்டாளம் மட்டும் பெருமை அல்ல. எல்லாவற்றுக்கும் மேலான மனித நேயம் தேவை. அது உன்னிடம் இருக்கவேண்டும்.”

 

 

 

 

 

விடுதலைப்புலிகளை நாயகர்களாக வரித்து, அவ்வாறு கோயில் கட்டும் முயற்சியை நிராகரிக்கும், அதே நேரம் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வு வேண்டும் என வலியுறுத்தும் சிபிஎம்மைத் தொடர்ந்து சாடிவரும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு:

 

இது அண்மையில் மறைந்த இரா ஜனார்த்தனம் ஜூனியர் விகடனில் 1998ல் எழுதிய கட்டுரை. முள்ளிவாய்க்கால் சோகத்திற்குப் பிறகு நண்பர்களை சந்திக்கும்போது கர்ஜிக்காமல், சாபமிடாமல், மாறாக விடுதலைப் புலிகள் செய்த தவறுகளை நினைவுகூறி, மிக வருந்தினார் ஜனா.

 

இன்று மாய்ந்து மாய்ந்து தமிழ்த்தேசியவாதிகளை ஆதரித்து கட்டுரைகளைப் பிரசுரிக்கும் ஜூவிக்கும் ஒரு நினைவூட்டல் இம்மீள் பதிவு.

 

 

 

 

 

பிரபாகரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

 

தம்பி, உனக்கு இப்படி ஒரு பகிரங்கக் கடிதம் எழுத நேரிட்ட சூழ்நிலை என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் உன்னை நண்பர் பெரிய ஜோதியுடன் கண்ட நாட்கள், நீ தங்க நானும், ராஜரத்தினமும், மணவைத்தம்பியும் கோடம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு தேடிய நாட்கள்…..முதல் முதலில் சந்தித்தபோது இப்படி உன் வளர்ச்சி உயரும், இலங்கைத் தமிழர் பிரச்சினை இப்படி வடிவெடுக்கும் என்று நாம் யாரும் நினைக்கவில்லை.

 

என் திருமணத்திற்குப் பின் மகிழ்ச்சிப் பயணமாக ஹனிமூன் மர்மத்தீவு செல்கிறோம். வட சென்னையில் தற்போது விஜிபி அமைத்திருக்கும் கடற்கரைப்பகுதி. படகில் நாம் செல்ல, தரை தட்டியதும் படகிலிருந்து குதித்து இப்படி ஒரு இடம் எங்களுக்குப் பயிற்சிக்குக் கிடைத்தால் போதும் என்று நீ குதூகலித்துச் சொன்ன வார்த்தைகள்..

 

இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகளை நான் நினைவுகொள்ளமுடியும். அந்த ஆரம்ப கால அன்பின் நினைவால் இதை எழுதுகிறேன்.

 

நீ ஒரு வீர இளைஞன். உன் வீர வரலாறு தமிழர் வரலாற்றில் நிச்சயம் எழுதப்படும். அந்த அளவு தீரனாகத் திகழ்ந்துவிட்டாய். உண்மை! மறுக்கவில்லை. நண்பர் பத்மநாபாவும் தோழர்களும் படுகொலை சம்பவத்துக்கு முன் – எல்டிடிஈக்கும் இலங்கை அரசுக்கும் போர் நடந்துகொண்டிருந்தபோது தமிழகத்து மக்கள் என்ன பேசிக்கொண்டார்கள் தெரியுமா? நான் ஒரு ஆட்டோவில் பயணம் செய்தேன். ஓட்டுநர் சொன்னார்: பாருங்கள் ”இந்த விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவத்தைப் பந்தாடப்போகிறார்கள்…இந்திய ராணுவத்தையே சமாளித்தவர்கள் அவர்களல்லவா?”

 

என் காதுகள் இப்போது என்ன வாசகங்களைக் கேட்கின்றன?

 

இந்தக் கொலையாளிகளையா ஆதரித்தோம்…இவர்களில் யாரும் தமிழகத்தில் இருக்கக்கூடாது..” இது போன்ற விமரிசனங்களைக் கேட்கவா என் போன்றோர் 15 ஆண்டுகள் போராடினோம்.

 

அன்று நீ தமிழகத்தில், இந்தியாவில் எந்த விதச் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் எல்.டி.டி,ஈ ஈடுபடாது என்று என்னிடம் வாக்குறுதி அளித்தாய். அந்த நாள் என் நினைவில் இருந்து எப்படி நீங்கும்?

 

நீயும் உமாமகேசுவரனும் சென்னை பாண்டி பஜாரில் ஒருவரையொருவர் சுட்டுக் கொல்ல முயலுகிறீர்கள். இருவரும் கைதாகி சென்னை மத்திய சிறையில் தனி அறையில் காலிலும் கையிலும் விலங்கிடப்பட்டு வைக்கப்படுகிறீர்கள். அந்தக் கெடுபிடிகளை எதிர்த்து நீ உண்ணாவிரதம் இருக்கப்போவதாக உன்னைச் சந்தித்த மறைந்த ஈழத்து நேதாஜி ராஜரத்தினம் மூலம் எனக்குச் சொல்லி அனுப்புகிறாய். நான் உன்னைச் சந்தித்து ”அவ்வாறு செய்தால் தமிழகத்துக்கு எதிராக, தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுவதாகும்…உனக்கென்ன தனிமைச்சிறை, கை கால்களில் விலங்கு…இந்தக் கெடுபிடிகளை அரசிடம் பேசி நீக்குகிறேன்,” எனச்சொல்லி அதன்படி நான் செய்கிறேன். நீ உண்ணாவிரத நோக்கத்தைக் கைவிட்டு, இனி எக்காலத்திலும் தமிழ்நாட்டில் அரசுக்கு எதிரான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று உறுதி கூறுகிறாய். இதே சம்பவத்தை மறைந்த முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆரை வைத்து நீ என் முன் கூறி, “இன்று முதல் அண்ணன் ஜனாவுக்குக் கொடுத்த வாக்குறுதியில் தவறாமல் இருக்கிறோம்,” என்றாய். அந்த வாக்குறுதி இப்போது காற்றில் பறந்ததேன்?

 

இன்று தந்தை செல்வா இல்லை…ஸ்ரீ சபாரத்தினம், உமாமகேசுவரன், பத்மநாபா போன்ற உன் சக தோழர்கள் இல்லை. உன்னால் மதிக்கப்பட்ட அண்ணன் அமிர்தலிங்கம், போராளிகளின் போர்க்குரல் யோகேஸ்வரன் இல்லை.

 

நீ இருக்கிறாய். உன்னிடம் தமிழ்நாடும் தமிழ்மக்களும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று எண்ணிப்பார்

 

நடந்தவை மறந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் ஒரு தலைவனுக்கு, விடுதலை வீரனுக்கு கொள்கை உறுதிப்பாடு மட்டும் போதுமானதல்ல..போர்க்குணம் மட்டும் ஆயுதமல்ல…பெரும் எண்ணிக்கை தற்கொலைப் பட்டாளம் மட்டும் பெருமை அல்ல. எல்லாவற்றுக்கும் மேலான மனித நேயம் தேவை. அது உன்னிடம் இருக்கவேண்டும். மற்ற இயக்கங்கள் தலைவர்களை இழந்து நிற்கின்றன. பழையவற்றை மறந்து அணைத்துச் செல் இன்னும் சில தலைவர்கள் இருக்கின்றனர். மதித்து நட. பிரித்தாளும் இலங்கையின் சூழ்ச்சியை உலகுக்கு எடுத்துச் சொல்.

 

அப்போது 1983 போல் மீண்டும் தமிழகம் எழும்,  உங்கள் ஒற்றுமை கண்டு இங்குள்ளோர் ஒருமித்த குரல் கொடுப்பர்.

 

தமிழ்நாடு வந்த தந்தை செல்வா சொன்னார்: நாங்கள் வெற்றி பெற தமிழ்நாடு, இந்திய ஆதரவு முக்கியம், அதைத் தேடி வந்தேன்…

 

நீயோ தமிழக ஆதரவு, இந்திய ஆதரவு பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எல்.டி.டி,.ஈ நடவடிக்கைகள் இலங்கை அரசுக்குக் குழப்பத்தைவிட பிற இயக்கங்களுக்கு, தமிழக மக்களுக்குக் குழப்பம் தருவதாக அமைந்துவிட்டதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

 

இந்தியாவுக்கு விரோதமாகச் செயல்படும் காலம் வரும் என எல்.டி.டி.ஈ சார்பாக இந்திய ஆங்கில ஏட்டில் செய்தி வந்தபோது, ராமாவரம் தோட்டத்தில் உன்னைச் சந்தித்து அக்கருத்து தவறு என்றேன். இந்தியாவுக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால் நாங்கள் எப்படி உங்களை ஆதரிப்பது என்றபோது, ”அது தவறு, மறுப்புத் தெரிவிக்கிறேன்…இனி நானே செய்தியாளர்களை சந்திப்பேன் என்றாய்.

 

இதையெல்லாம் நினைவுபடுத்துவது எனக்கும் உனக்கும் இருந்த தொடர்புகளை நினைவுகொள்ள அல்ல.…நான் உன்னிடம் பெற்றிருந்த உண்மையான அன்பை நினைவுபடுத்த – சிந்தி ,செயல்படு

 

இனி இலங்கைத் தமிழர்கள் எதிர்காலம் நீ எடுக்கும் முடிவுகளில் இருக்கிறது

 

தந்தை செல்வா தோக்கு (துப்பாக்கி) டுத்தவர் தோக்கால் அழிவான் என்றார். அது அவர் வன்முறைக்குத் தந்த விளக்கம்.

 

ஜனநாயகப் பாதைக்கு நீ வர முடிவெடுத்தாய்…தற்போது மீண்டும் கொரில்லாப் போருக்குப் புறப்படுகிறாய். முடிவு செய்!

 

காந்தி, செல்வா  வழிக்கு வா. போராளிகள் அனைவரிடமும் அன்பு காட்டு. நீயே தலைமை தாங்கு வெற்றி கொள். என் வாழ்த்துக்கள்

—டாக்டர் இரா ஜனார்த்தனம்

 

Posted in Uncategorized | 2 Comments

தமிழ்ச் சமூகச் சூழலை நாசப்படுத்தும் அவதூறுப் பிரச்சாரம்

Image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கெதிரான தமிழ்த் தேசியவாதிகளின் இடையறாத பிரச்சாரம் மிகுந்த வேதனையை அளிக்கிறது, எரிச்சலையும் ஊட்டுகிறது. ஏன் இப்படி? அடுத்து என்ன?

விடுதலைப் புலிகளின் பல்வேறு தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பவர்கள் இலங்கைப் பிரச்சினையில் தெளிவானதொரு நிலைப்பாட்டை எடுத்துவரும் சிபிஎம்மை ஏதோ மஹிந்த ராஜபக்சேயாகச் சித்தரிக்க முயல்வது வேடிக்கைதான்.

 

தங்களிடமிருந்து வேறுபடுவோரை ஏதோ ஒட்டுமொத்த சமூகத்தின் எதிரிகளாகக் காட்டமுயல்வதொன்றும் புதிதல்ல. வலதுசாரிகள், இடதுசாரிகள், ஃபாசிஸ்டுகள் என்று பலரும் பல்வேறு காலகட்டங்களில் அத்தகைய அணுகுமுறையினைக் ,மேற்கொண்டிருக்கின்றனர். இணையதள யுகத்தில் அத்தகைய போக்கு மேலும் உக்கிரமாகிறது.

 

அத் தளத்தில் பிரபாகரனுக்கு வாழ்த்துப்பா பாடுவோரே ஒப்பீட்டளவில் அதிகம். ஆனாலுங்கூட, கணினி சமூக சந்திப்பு மேடைகள் வெளிச் சமூகத்தின் யதார்த்தத்தினை பெரிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, அதன்மீது சொல்லிக்கொள்ளும் அளவு தாக்கத்தினையும் ஏற்படுத்திவிடமுடியாது என்று திருப்திப்பட்டுக்கொண்டுவிடமுடியாது. ஃபேஸ்புக் கருத்துக்கள் ட்விட்டர் பதிவுகள், வலைப்பூக்கள் அனைத்துமே பொதுக்கருத்தை உருவாக்குவதில் ஏதோ ஒருவித பங்கை வகிக்கின்றன.

 

முற்போக்காளர்கள், ஏன் தாராளவாதக் கருத்துடையவர்களால் கூட சற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு நபர் சுப்பிரமணியன் சாமி. மிக மோசமான அரசியல்வாதிகளில் ஒருவர். ஆனால் இப்போது அவருக்கெதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் பிரச்சாரம், அவரும் முட்டாள்தனமான அகந்தையில் பதிலிறுப்பது, இதன் விளைவாய் அவர் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தாலும் வன்முறை சிறிய அளவிலாவது வெடிக்கலாம். இது ஆரோக்கியமான போக்கே அல்ல.

 

அதே போன்று முதலில் சன் டிவி ராஜா விஷயத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தைக் குறிவைத்துத் தாக்குதல் பின்னர் இப்போது இலங்கைப் பிரச்சினையில் எந்த அளவு சிபிஎம் மீது நெறியற்ற அவதூறுகள்.

 

சிபிஎம் ஆதரவாளர்கள் ஏதோ ஆங்காங்கே தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். ஆனால் அது இடதுசாரி மறுமொழியாக உருவாகப் பெறவில்லை.

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்த் தேசிய ஜோதியில் கலந்துவிட்டது. விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் வேறு சில அறிவுஜீவிகளோ சிபிஎம்முடன் வேறு வழிகளில் கடுமையாக முரண்படுவதால், தற்போது தமிழ்த்தேசியவாதிகளின் அவதூறுகளைக் கண்டுகொள்வதில்லை.

 

சிபிஎம்மின் இந்திய தேசியம் குறித்த புரிதலை விமர்சிக்கலாம். உ.ரா.வரதராஜன் பிரச்சினை கையாளப்பட்டது குறித்து கடும் விமர்சனமும் இருக்கலாம். ஆனால் இணையதளவெளியை தமிழ்த் தேசியவாதிகளுக்கு விட்டுக்கொடுத்துவிடுவது சிபிஎம்முக்கு மட்டும் பின்னடைவாக அமையாது. சற்றும் சகிப்புத் தன்மையற்று ஆங்காரமாகக் கூச்சலிட்டு எதிர்க்கருத்துடையவர்களை முடக்க முயலும் இன்றைய போக்கு ஒரு கட்டத்தில் இடதுசாரிகளுக்கே பேராபத்தாக முடியும்.

 

தலித் பிரச்சினையினை வெகு தாமதமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கையிலெடுத்தது. ஆனால் அத் தளத்தில் தன் பணியினை சிறப்பாகவே செய்கிறது அக்கட்சி. இது இன்னமும் தீவிரமானால், ஓரளவேனும் தலித்துக்களை தங்கள் சொந்த இலாபத்திற்காகப் பயன்படுத்த முயலும் சக்திகளை ஓரளவேனும் தடுத்து நிறுத்தவியலும்.

 

அதே போலத்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒரு கட்டம் வரையில் சி.பி,எம் போதுமான அக்கறை காட்டவில்லை. இன்றுகூட உணர்வுபூர்வமான அரசியலை நிராகரித்து அதே நேரம் சொல்லொணாத் துயருக்குள்ளாகும் அம்மக்களின் நியாயமான அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கும் வழி குறித்த நிலைப்பாட்டை வகுப்பதென்பது எளிதில்லை. ஆனால் சிபிஎம் திறம்படவே துணிச்சலுடன் அத்தகைய பாதையில் முன்னேறுகிறது..

 

அத்தகைய முன்முயற்சிகளுக்கு வலுசேர்ப்பது முற்போக்காளர் அனைவரின் இன்றைய தலையாய கடமையாகும்

 

 

 

Posted in Uncategorized | 1 Comment

’இன்றைய இஸ்லாமிய எழுச்சிகள் குறித்து ஆழமான விவாதங்கள் தேவை’

கனடா நாட்டைச் சேர்ந்த தாரெக் ஃபடா ஒரு முற்போக்கு முஸ்லீம். சர்வாதிகாரத்தை, கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராடவேண்டியது முஸ்லீம்களின் கடமை என்கிறார் அவர்,

இஸ்லாமிய எழுச்சிகளை ஏதோ பெரும் புரட்சியாகக் கருதும் இடதுசாரிகள் பெரும் தவறு செய்கின்றனர். பொருளாதார சுரண்டலுக்கெதிரான குரலல்ல அவ்வெழுச்சிகள். மாறாக பிற்போக்குவாத ஃபாசிசத் தன்மை பெற்றவை, மக்களுக்கெதிரானவை. சிரியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அவர்கள் நேரில் சென்று பார்த்தால்தான் அங்கெல்லாம் என்ன நடக்கிறது என்பது புரியும்.

தாராளமனம் படைத்த இந்திய முஸ்லீம்கள் பலர் உலகின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கின்றனர்.. கருத்து சுதந்திரம் மறுக்கப்படும் முஸ்லீம்களுக்காக இவர்கள் குரல் கொடுக்கவில்லையெனில் வேறு யார் முன்வருவார்கள்?

இஸ்லாமிய ஆட்சியில் என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்பதற்கு பாகிஸ்தான் ஓர் எடுத்துக்காட்டு.

இந்தியாவில் முஸ்லீம்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், முஸ்லீம்கள் என்பதாலேயே நியாயமான பல மறுக்கப்படுகின்றன. ஆனால் அத்தகைய அநீதிக்கெதிராக குரலை எழுப்பும் உரிமை எனக்கு இங்கிருக்கிறதே,. எனவே இந்தியச் சூழல் எனக்கு உவப்பாய் இருக்கிறது.

Imageபெண்களுக்கெதிரான ஒடுக்குமுறையினை நாம் பல இடங்களில் காண்கிறோம். ஆனால் இங்கு எவரும் அவ்வாறு பெண்களை ஒடுக்குவது சரி, இறையைப் போற்றும் வழி என்று கூறுவதில்லை. மாறாக இஸ்லாமிய சமூகங்களில் சட்டப்படியே பெண்கள் ஆண்களுக்குத் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இங்கு  பெண்களில் மசூதிகளில் தொழ அனுமதி இல்லை என்றால், அதற்கு இந்துக்களா பொறுப்பு? தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு கல்வியை மறுப்பது இந்திய சமூகத்தில் இருக்கும் வாய்ப்புக்களைத் தவறவிடுவதாகும்.

உலகிலேயே இந்தியாவில் மட்டுமே முஸ்லீம்கள் எதிர்விளைவுகளைப் பற்றி அஞ்சாது தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூற முடிகிறது. பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் போன்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்களை விடவும் இந்திய முஸ்லீம்களின் வாழ்நிலை சிறப்பாகவே இருக்கிறது. பன்முகத்தன்மை கொண்டதொரு நாட்டில் முரண்படும் பல கூறுகளுக்கிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்படமுடியும் என்பதையே இந்நாட்டு வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. எதிர்காலம் குறித்து நமக்கு நம்பிக்கையினையும் இந்தியா அளிக்கிறது.

(டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஏப்ரல் 19, 2013 அன்று வெளியாகியிருக்கும் பேட்டியிலிருந்து சில பகுதிகள்)

மேற்கூறப்பட்டவை குறித்து தீவிர உரையாடல் அவசியம்

Posted in Uncategorized | Leave a comment

மாணவர் ஆர்ப்பாட்டங்கள் – மறைந்திருக்கும் விபரீதங்கள்

 

 Imageமீண்டும் ஒரு குட்டிப் பிரளயம். அதுவும் தணிந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களின் அவரவர் தத்தம் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஆனாலும் இலங்கைக்கெதிரான தமிழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் இந்தியாவின் கவனத்தை ஈர்த்தன, நியூயார்க் டைம்ஸ் நாளேடு கூட அதைப் பற்றி எழுதியது, மிரண்டுபோன திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தே விலகியது.

இலங்கைத் தமிழர்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது, இந்தியா உள்பட உலக நாடுகள் இப்பிரச்சினையில் போதிய அக்கறை காட்டவில்லை, வெகு நாட்களுக்குப் பிறகு மாணவர்கள் ஏதோ ஒரு பொதுப்பிரச்சினைக்காகத் தெருவிற்கு வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மையே, ஆயினுங்கூட இவ்வாப்பாட்டங்களால் எனக்குப் பெரிதாக கிளர்ச்சி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

பொதுவாக எவ்வொரு மாணவர் எழுச்சியும் நீடிக்கமுடியாது. அவர்களின் கட்டாயம் அப்படி. படிப்பை முடித்தாகவேண்டும். இந்திய விடுதலைப் போரின்போது ஆயிரக்கணக்கில் மாணவர்கள் கல்லூரியை விட்டே வெளியேறியிருக்கலாம். ஆனால் அது அந்தக்காலம். அந்த உத்வேகம் இனி ஒருமுறை வர வாய்ப்பில்லை.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக வரலாற்றில் ஒருவகையில் ஒரு மைல்கல்தான். ஆனால் அப்போதெழுந்த வட இந்தியர்க்கெதிரான உணர்வுகள் தணிந்து விட்டன

தாராளமயக் கொள்கைகளின் பின்புலத்தில் இந்தியா காணும் பொருளாதார வளர்ச்சியால் பயன்பெறும் தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கம் இப்போது இந்தி எதிர்ப்பை ஏறத்தாழ கைவிட்டுவிட்டது. திராவிடக் குஞ்சுகளால் நடத்தப்படும் தொலைக்காட்சி சானல்களே இந்தியை வீட்டிற்குள் கொண்டுவந்துவிட்டன. இந்தி எதிர்ப்பிற்குப் பின்னான அரசியல், வட இந்திய ஆதிக்கம் என்பது  ஏற்றுக்கொள்ளமுடியாத மனித உரிமை மீறல் என்பதே மறந்துபோய்விட்டிருந்த சூழலில் இப்போது சற்று உக்கிரமாகவே இன உணர்வு வெளிப்படுகிறது.

இந்நிலையில் முற்போக்காளர்கள் திணறுவதும் உண்மையே. “ஏராளமான தோற்கடிக்கப்பட்ட போராட்டங்களை உலகம் கண்டிருக்கிறது. – ஆனால், மனிதர்கள் வாழும் மட்டும், மனித நேயம் வெல்லும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

உங்கள் எல்லைக்கு உட்பட்ட இரண்டு கோரிக்கைகளைதொடர்ந்து முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் வாழும் அகதிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது. ஒவ்வொரு கிராமங்களிலும், சேரி என்றொரு அகதி நிலை தொடருவதற்கு முற்றுப் புள்ளி வைப்பது.

சம நீதிக்கான மெய்யான உள்ளக்கிடக்கை உங்களுக்கு இருந்தால்என் கோரிக்கையில் நெருடல் இருக்காது என்ற நம்பிக்கையுடன்,” என்று ஒரு வேண்டுகோள் இணையதளத்தில்.  ஆனால் அத்தகைய சிந்தனைகளுக்கெல்லாம் இடமிருப்பதாகவே தெரியவில்லை.

ஒரு புறம் வைகோ போன்ற தமிழின உணர்வாளர்கள் உசுப்பிவிடுகிறார்கள். திமுகவிற்கு தர்மசங்கடம் ஏற்படுத்துவதில் அளவு கடந்த ஆனந்தம் அவர்களுக்கு, இன்னொருபுறம் அரசை எதிர்த்து, ஆள்வோரை எதிர்த்து எங்கு கலகக்குரல் எழுந்தாலும் புளகாங்கிதம் அடைவோர் இணையவெளியை நீக்கமற நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களில் ஒரு சிறிய பகுதியினரே விடுதலைப்புலிகளையும் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் நாயகனாக வரித்திருக்கிறார்கள்,, ஏனையோருக்கு இவ்வார்ப்பாட்டங்கள் வகுப்பைப் புறக்கணிக்க ஒரு வாய்ப்பு. எனவே விரைவில் இது அடங்கிவிடும். வைகோ, நெடுமாறன் போன்றோருக்கு ஏமாற்றமாய்த்தான் இருக்கும் என்றாலுங்கூட இப்போக்கு கவலையளிக்கிறது.

பலர் சுட்டிக்காட்டுவதைப்போல் இவர்களுக்கு அரசியலெதுவுமில்லை. அறவே இல்லை. தொப்புள்கொடி உறவு, ரத்த சம்பந்தம், மோதல்களின் உச்சகட்டத்தில் நிகழ்ந்த படுகொலைகள், குறிப்பாக பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கோரமுடிவினை அம்பலப்படுத்திய சானல் 4 புகைப்படங்கள் இவையெல்லாம் உணர்வுகள் கொந்தளிக்க வழிசெய்தன.

இக் கொந்தளிப்பு அடங்கிவிடும்தானே என்று அலட்சியப்படுத்திவிடமுடியாது. ஏனெனில் இவ்வார்ப்பாட்டங்களில் பெரும் ஆபத்து ஒன்று இருக்கிறது. அடையாள அரசியலின் ஆபத்து அது. தமிழினவாதம் சிங்கள, பௌத்த வெறுப்பாக, வட இந்தியர் மீதான வெறுப்பாக, இஸ்லாமியர் மீது கூட வெறுப்பாக, தமிழர்களின் எதிரிகளாக அடையாளப்படுத்துவோர் அனைவர் மீதுமான வெறுப்பாக உருவாகிக்கொண்டிருக்கிறது.

ஆங்காங்கே  இலங்கை தொடர்பான அலுவலகங்கள், பின்னர் பௌத்தபிக்குக்கள் என்று தாக்குதல்கள் எம்மவர் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுவதற்குக் காரணமாகவிருந்தவர்களை இரண்டு தட்டு கூட தட்டக்கூடாதா என்று கூட வாதிடப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் உதயமே தமிழ்த் தேசீயம் சீரழிவுப்பாதையில் செல்லுவதைக் குறிப்பதாகும். சென்னை ராஜதானியில் பிராமண ஆதிக்கத்திற்கெதிரான கலகக்குரல் மெல்ல மெல்ல தமிழ்த் தேசீயமானது. திராவிட இயக்கத்தின் நசிவு அம்சங்களைப்  பெரியார் ஈவேரா அலட்சியம் செய்ய, அதிரடிப்பேச்சுக்கள், கண்ணியமற்ற சொல்லாடல்கள், எதிரிகள் அனைவரையும் பாவிகளாக அல்லது கொடுங்கோலர்களாக சித்தரிப்பது இவையெல்லாம் திராவிட இயக்கத்தின் அனைத்து தளங்களிலும் ஊடுருவியது.

வர்க்க பேதம் குறித்த புரிதல் இன்மை, வெட்டிப்பேச்சு, மீசை முறுக்குதல், உசுப்பேற்றுதல், ஆங்காங்கே சிற்சில வன்முறை இவையெல்லாம் தமிழ்த்தேசீயத்தின் அடையாளங்களாயின.  

வரைமுறையற்ற அழித்தொழிப்பு,  ஏறத்தாழ ஃபாசிச அணுகுமுறை, இஸ்லாமியிராயிருந்தாலும் சரி இந்தியராயிருந்தாலும் சரி, தங்களுக்கு ஏற்புடையவர்களில்லையெனில் எதிரிகள்தான், அழிக்கப்படவேண்டியவர்கள்தான் என்ற ரீதியிலான விடுதலைப்புலிகளின் போக்கு தமிழினவாதிகளுக்கு உச்சகட்ட கிளர்ச்சிகளை அளித்தது. பார்த்து, கேட்டு, கற்பனை செய்து மகிழ்ச்சியில் திளைக்கும் மனநிலை உளவியல் வல்லுநர்கள் அறிந்ததுதானே.

ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் பொதுவாகத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கைத் தமிழ்ப்போராளிகள் என்றால் முகம் சுளிக்கும் அளவு நிலை மாறினாலும் இன உணர்வாளர்கள் பிரபாகரனுக்கு வாழ்த்துப்பா பாடுவதை நிறுத்தவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் கணிசமான நிதி உதவி இப்போக்கினை இன்னமும் கூர்மையாக்கியது.

கூடவே சிங்கள ஆளும் வர்க்கத்தின் கொடுஞ்செயல்கள். மெல்ல மெல்ல ராஜீவ் படுகொலை அல்லது அமிர்தலிங்கம் படுகொலை எல்லாம் மறக்கப்பட்டது. ஆயினும் 1980களில் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் எழுந்த ஆதரவு போனது போனதுதான், தொலைந்ததுதான் என்றே 2009ல் தோன்றிற்று.

எந்த அரசியல் கட்சியுமே இலங்கை பிரச்சினையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தனி ஈழம் என்று ஜெயலலிதா முழங்கினார்தான்.. ஆனால் அதற்குள் முள்ளிவாய்க்கால் முடிந்துபோய்விட்டிருந்தது. மூன்று மணிநேரம் உண்ணாநோன்பிருந்தவரின் தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களைப் பெற்றது. பிரபாகரன் ஆதரவாளர்களின் முழக்கங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு தாக்கம் எதனையும் ஏற்படுத்தவில்லை.

கொத்துகொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது நிகழாத எழுச்சி இப்போது நிகழ்ந்துவிட்டதா? தெளிவாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் பரந்துபட்ட அளவில் பாலச்சந்திரன் புகைப்படங்களுக்குப் பின்னால், இலங்கை மீதும், அதனை ஊக்குவித்த மன்மோகன் சிங் அரசு மீதும் கோபம் இருப்பதை உணரமுடிகிறது. இச்சூழலையே சீமானின் காலிகளும் அவர்களுடன் போட்டியிடமுயலும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளும் பயன்படுத்திக்கொள்ளமுடிகின்றனர். இதனாலேயே இவர்கள் தேர்தல் அரசியலிலும் முன்னேறிவிடமுடியும் என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை. பௌத்தபிக்குமார் மீதான தாக்குதல்கள் பலரை முகம் சுளிக்கவைத்திருக்கின்றன. ஆனாலும் வெறுப்பரசியல் தீவிரமாகிக்கொண்டே வருகிறது,

மஹிந்தாவின் உருவபொம்மையைக் கொளுத்தி அல்லது தூக்கு போட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியவர்கள் இப்போது சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்கிற்கும் அதே போன்ற தண்டனைகளை வழங்கும் அளவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் துணிச்சல் வந்திருக்கிறது. ஜெயலலிதா வேடிக்கை பார்க்கிறார், மறைமுகமாக ஊக்குவிக்கிறார் என்றாலும் இதைப் போன்ற செயல்களில் இறங்கமுடிகிறதென்பதே இவற்றுக்கு ஒருவித அங்கீகாரம் கிடைத்துவிட்டதுபோலத்தான். அதுதான் நமது பண்பாடு எவ்வளவு கீழ்த்தரமாகிக்கொண்டிருக்கிறது என்று என்னை எண்ணவைக்கிறது.

மஹிந்தா கொலைகாரனென்றால் பிரபாகரன் யார்? விடுதலையின் பெயரால் அவர்கள் செய்த கொடுமைகள் எண்ணிலடங்கா. ஒருவேளை பிரபாகரன் ஈழம் உருவாகியிருந்தால் அது போல்பாட் சாம்ராஜ்ஜியமாகத்தான் இருந்திருக்கும். அவர்கள் ஆளுகையில் இருந்த பகுதிகளில் ஏறத்தாழ அப்படித்தானே இருந்தது – இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்தானே. இவையெல்லாம் மறக்கடிக்கப்படுகின்றன. பிரபாகரனின் எதிரிகள் அனைவரும் மனிதகுலத்தின் எதிரிகளாகக் காட்டப்படுகின்றனர். போர்க்களத்தில் சயனைட் அருந்தி உயிரைவிடாமல் சரணடைந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முனைந்த பிரபாகரன் பற்றி எவரும் தவறாகப் பேச அனுமதிக்கப்படவில்லை. இதெல்லாம் தமிழ்ச் சமூகத்திற்குப் பெருங்கேடு,

யாழ்ப்பாண வெள்ளாளர்களின் மதப்பற்றை ஊற்றி வளர்த்து, இஸ்லாமியர்களை எதிரிகளாகவே பாவித்து படுகொலைகள் பல புரிந்த அவர்களை யாழ்ப்பாணத்தைவிட்டே துரத்திய அதே பிரபாகரனின் புகழ்பாடுகின்றன சில இஸ்லாமிய அமைப்புக்கள். அப்படி ஒரு கட்டாயம் அவர்களுக்கும்.

பொதுவாக தமிழர் மத்தியில் ஒருவிதக் கொந்தளிப்பு உருவாகியிருக்கும் நிலையில், மத்திய அரசு எதையும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. 2009ல் சற்று அழுத்தம் கொடுத்திருந்தால் இறுதிக்கட்ட இனப்படுகொலையைத் தவிர்த்திருக்கமுடியும். ஆனால் விடுதலைப்புலிகள் எவ்விதத்திலும் தப்பிவிடக்கூடாது என்று சொந்தக்காரணங்களுக்கும் அரசியல் காரணங்களுக்காகவும் நினைத்த இந்தியா மஹிந்தாவை ஊக்குவித்தது, பின் தொடர்ந்த தேர்தல்களில் பெரிய அளவில் பின்னடைவு ஏதும் ஏற்படாத நிலையில் இப்போதும் அப்படியே சமாளித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு விழிக்கிறார்கள்.

எக்காளமிடும் மஹிந்தா கும்பல் சோனியா-ராகுல்-மன்மோகன் சிங்கிற்கு ஆறுதல் தரும் வகையில், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை முகம்கொடுப்பதுபோல பாவனை செய்யக்கூடத் தயாராக இல்லை. பாகிஸ்தானும் சீனாவும் எங்களை ஆதரிக்கின்றன, உன்னால் என்ன செய்யமுடியும் என்று மஹிந்தா கொக்கரிக்கிறார். விளைவு ஆட்சியும் கவிழ்ந்து தமிழகத்தில் எஞ்சியிருந்த செல்வாக்கையும் காங்கிரஸ் இழக்கக்கூடிய சூழல்.,

ராகுல்-காங்கிரஸ் எக்கேடு கெட்டுப் போகட்டும்.  இன்று பொங்கி வழியும்  இன உணர்வு எங்குபோய் முடியும் என்பதே கேள்வி. பின்னொரு கட்டத்தில் தனித் தமிழ்நாடு கோரும் போராட்டம் கூட வெடிக்கலாம், அந்த அளவு கசப்புணர்வும், ஆத்திரமும் இன்று பரவலாக.

இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் மெத்தனப்போக்கே. இந்திய ஒன்றியத்தில் உறுப்பு மாநிலங்களுக்கெல்லாம் பங்கிருக்கிறதா இல்லையா? அவர்களது உணர்வுகளுக்கு ஒன்றியத்தை ஆளும் அரசு மதிக்கவில்லையெனில் ஒன்றியத்தில் அம்மாநிலம் தொடரவேண்டிய அவசியம்தானென்ன?

(நூறு கோடி மக்களுக்கும் மேல் உள்ள இந்தியாவில் 7 கோடிக்கும் குறைவானவர்களே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் எதற்காக மத்திய அரசு அங்கே தலையிடவேண்டும்? அப்புறம் காஷ்மீரில் மற்ற நாடுகள் தலையிட வழிவகுக்காதா என்றும் சிலர் கேட்கின்றனர். காஷ்மீர் என்றல்ல உலகில் எந்த மூலையில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகிறதோ அங்கெல்லாம் உலகம் முழுமையும் ஒன்று திரண்டு குரல் எழுப்புவதே நியாயம்.)

இன்றைய நிலையில் எம்மாநிலமும் பிரிந்துபோக விரும்பாமல் இருக்கலாம். ஒன்றியத்தில் தொடர்வதால் விளையும் பயன்கள் இழப்புக்களை விடவும் அதிகமாக இருக்கலாம்.

தவிரவும் ஆயுதங்களையும் படைகளையும் குவித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு எங்கும் பிரிவினை கோரும் குழுக்கள் வளர அனுமதிக்காது என்பதையும் மறக்கலாகாது,

இந்நிலையில் ஒன்றியத்திற்கெதிரான கலகங்கள் சமூக பொருளாதார ரீதியில் எத்தனை பின்னடைவுகளை எற்படுத்தும் என்பதற்கப்பால், ஏறத்தாழ அனைத்து அடையாள அரசியலும் விபரீதங்களுக்கே வழிவகுத்திருக்கின்றன என்பதையே மனதில் கொள்ளவேண்டும்.

இதையெல்லாம் மாணவர்கள் உணராததில் வியப்பில்லை. அவர்கள் ஏதோ மாபெரும் புரட்சியில் இறங்கியிருப்பதாகக்கூட நினைக்கலாம். ஆனால் அவர்களைப் பார்த்து மெய்சிலிர்க்கும் இடதுசாரி சிந்தனையாளர்களைப் பார்த்தால்தான் வேதனையாக இருக்கிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தியாவிலேயே இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தியது என்பது உண்மை. ஆனால்  இந்தி அரக்கி கார்ட்டூன்கள் முதல் அன்றைய பல்வேறு சொல்லாடல்கள் தமிழின வாதத்தின் ஒரு பகுதியாயின, ஒரு வகையில் பண்பாட்டுச் சீரழிவிற்கும் அது வித்திட்டது எனலாம். பெரியாரின் சில வகை போராட்ட வடிவங்களும் அத்தகைய சீரழிவிற்கு கட்டியம் கூறியது.

இதுகுறித்தெல்லாம் அதிகம்பேர் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. திவாலாகிவிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜோதியில் கலந்துவிட்டனர். ஆனால் மார்க்சிஸ்ட் பிரிவினர் இன்றைய எழுச்சியையைப் புறந்தள்ளாமல் அதே நேரம் மிகக் கவனமாகவே செல்லுகின்றனர். அத்தகைய புரிதல் பரவலாக சென்றடையுமானால் அதுவே விஷமுறிவாகவும் அமையலாம்.

 

 

 

 

 

Posted in Uncategorized | 1 Comment